Club Events
04-Oct-2024
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரி சார்பாக ஆகஸ்ட் 22-ம் தேதி அன்று "இந்திய சுதந்திர வரலாறு" என்ற தலைப்பில் இணைய வழியாக வினாடி வினா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு 4.10.2024 அன்று பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் நா.முத்துமணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். சுவாமிஜி நாராயனானந்தர் அவர்களும் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்லூரி, அரசு மற்றும் சுயநிதிப் பிரிவு செயலாளர் முனைவர் கந்தப்பன் அவர்களும் கலந்து கொண்டு மாணவியருக்கு பரிசுகளை (ஊக்கத்தொகை) வழங்கினார்கள். இந்நிகழ்வில் தமிழ்த் துறைத் தலைவர் உட்பட துறைப்பேராசிரியர்களும்,இளங்கலை மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College