Club Events
25-Jan-2025
கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் உலகத்திருக்குறள் மையம் இணைந்து நடத்திய உலகளாவிய அளவில் ஒரே நாளில் 100 தலைப்புகளில், 100 இடங்களில், 100 மாநாடுகள், 100 மலர்கள் என்ற மாபெரும் உலக சாதனை நிகழ்வானது, 25.01.2025 சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகக் கருத்தரங்க அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வானது; காலை 10:30 மணியளவில் துவங்கியது. மேலும் இந்நிகழ்வானது பல்வேறு பார்வையாளர்கள் முன்னிலையிலும், இணைய வழியாக உலக சாதனை நிறுவனத்தினர் முன்னிலையிலும் நடைபெற்றது. “திருவள்ளுவரின் காலவியல் சிந்தனைகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற இம்மாநாட்டை கல்லூரி முதல்வர் முனைவர் நா.முத்துமணி அம்மா அவர்கள் தலைமை தாங்கி நூல் வெளியிட்டு சிறப்பித்தார்கள். தமிழ்த்துறைத் தலைவரும், இம்மாநாட்டின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ச.சந்திரகலா அவர்கள் வரவேற்புரையாற்றினார். பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை மற்றும் வணிகவியல் துறை சார்ந்த பேராசிரியர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை வாசித்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் வே.ஹரிதாஸ் ஐயா அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வு மதியம் 12:15 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College