செருவந்த போழ்தில் சிறைசெய்யா இலக்கிய மன்றத் துவக்க விழா-2024

செருவந்த போழ்தில் சிறைசெய்யா இலக்கிய மன்றத் துவக்க விழா-2024

செருவந்த போழ்தில் சிறைசெய்யா  இலக்கிய மன்றத் துவக்க விழா-2024

Club Events

12-Jul-2024

இலக்கிய மன்றத் துவக்க விழா

 

பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கவையம்புத்தூர் தமிழ்ச்சங்கம் இணைந்து  நடத்தும் இலக்கிய மன்றத் துவக்க விழாவானது 12.07.24  இன்று  தமிழ்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கியது. தமிழ்த் துறை தலைவர் முனைவர் ச. சந்திரகலா அம்மா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.  கல்லூரி  முதல்வர் முனைவர் நா. முத்துமணி அம்மா அவர்கள் தலைமையுரை ஆற்றினார். கவையம்புத்தூர் தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த திரு.ப.தெய்வசிகாமணி ஐயா மற்றும் பெ. தருமலிங்கம் ஐயா ஆகிய இருவரும் "படித்ததில் பிடித்தது"   "அறிவோம் ஓர் அறிய செய்தி" என்னும்  பொருண்மையில் சிறப்புரை வழங்கினார்கள்.

"செருவந்த போழ்தில் சிறைசெய்யா" என்ற தலைப்பில் அமர்வுச் சிறப்புரையாற்றிய முனைவர் வே. குழந்தைசாமி அவர்கள் பேசுகையில், ஆங்கிலமும் பிற மொழிக் கலப்பும் இல்லாத தூய தமிழில் பேசுவது தான் நாம் நம் தாய்மொழிக்குச் செய்யும் மிக உயர்ந்த தொண்டு எனவும், அன்னை தமிழ் பெயர் சூட்டி அழகு தமிழில் ஆசையாய் உள்ளன்போடு அழைத்து மகிழ்வதே தமிழன்னைக்கு நாம் சூட்டும் அணிகலனாகும் என்றார்.

 

 அவர்களைத் தொடர்ந்து பேராசிரியர்களும் மாணவர்களும் தமிழ் சான்றோர் குறித்தான உரையை வழங்கினார்கள். தமிழ்த் துறை இணைப்பேராசிரியர் முனைவர் வெ. ஹரிதாஸ் ஐயா அவர்கள் நன்றியுரை வழங்கனார்.நிறைவாக நாட்டுப்பண் இசைக்க விழாவானது இனிதே நிறைவுற்றது.

No Images Found

ADMISSION