Club Events
29-Jul-2026
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை கணித்தமிழ்ப் பேரவை & IQAC இணைந்து *27.07.2026 முதல் 31.07.2026 வரை (காலை 10 மணி முதல் 11. 30 மணி வரை)* ஐந்து நாள் *"கணினி யுகமும் தமிழும் - 3”* எனும் பொருண்மையிலான ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் மூன்றாம் நாள் நிகழ்வு 29.07.2026 இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சிறப்பு விருந்தினராக முனைவர் நா. அனிதா , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, எஸ். ஆர். எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி அவர்கள் கலந்துகொண்டு *தமிழாய்வு மற்றும் கற்பித்தலுக்கான செயற்கை நுண்ணறிவு கருவிகள்.* என்கிற பொருண்மையில் சிறப்புரை நிழ்த்தினார். அவர் தமது உரையில் இன்றைய காலச்சூழலுக்கேற்ப செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை பயன்படுத்தி திறன்மிக்க ஆசிரியராக மாறலாம் சிறந்த கற்பித்தலை வழங்கலாம், ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் திறனை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி எவ்வாறு மேம்படுத்துவது என்று பயிற்சி அளித்தார். பேராசிரியர்கள், தமிழ் ஆர்வளர்கள், ஆய்வு மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College