Club Events
11-Sep-2025
பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி (11.09.2025) பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறை சார்பாக 10-09-2025 அன்று பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி, பாட்டுப் போட்டி மற்றும் நடனப் போட்டிகள் காலை 10 மணி முதல் தொடங்கி மாலை 4 மணி வரை வகுப்பறை மற்றும் கல்லூரி நூலகத்தில் நடைபெற்றது. அனைத்துத்துறை மாணவர்களும் கலந்துகொண்டனர். இப்போட்டிகளுக்கு நடுவராக வணிகவியல் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறைத்தலைவர் முனைவர் குமரேசன் ஐயா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு 11.09.2025 அன்று நடைபெறும் பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் பரிசுகள் வழங்கப்படும்.
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College