தமிழ் ஹேக்கத்தான்

தமிழ் ஹேக்கத்தான்

தமிழ் ஹேக்கத்தான்

Club Events

23-Jun-2026

பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, கணித்தமிழ் பேரவை சார்பாக 23.06.2026 இன்று காலை 10 மணிக்கு இணைய வழியில் தமிழ் ஹேக்கத்தான் (TAMIL HACKATHON) பயிலரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் தொழில்நுட்ப வல்லுநர், கணினித்தமிழ் விருதாளர் திரு நீச்சல்காரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இணைய வழியில் பயிற்சியளித்தார். இப்பயிற்சியில் தமிழில் மென்பொருட்களை எவ்வாறு உருவாக்கம் செய்வது, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மாணவர்கள் எவ்வாறு தங்களது அறிவுத்திறனை வளர்ப்பது, ஏற்கனவே உள்ள தமிழ் சார்ந்த மென்பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது, புதிய மென்பொருட்களை உருவாக்கும் வழிமுறைகள் குறித்து செயல்விளக்கமாகப் பயிற்சியளித்தார். இப்பயிலரங்கில் அனைத்துத்துறை மாணவர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

ADMISSION