தெரிந்த கோவை தெரியாத கதை

தெரிந்த கோவை தெரியாத கதை

தெரிந்த கோவை தெரியாத கதை

Club Events

12-Jun-2025

பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறை, விவேகானந்தர் வாசகர் வட்டம் சார்பாக மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் பொருட்டு ‘புத்தகம் பேசுகிறது’ நிகழ்வானது 12-06-2025 அன்று பிற்பகல் 02:00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘தெரிந்த கோவை தெரியாத கதை’ எனும் புத்தகத்தின் ஆழ்ந்த கருத்துக்களைத் தமிழ்த்துறைப் பேராசிரியர் செ.கனகராஜ் அவர்கள் விரிவாக உரை நிகழ்த்தினார். மேலும் மாணவர்களின் சார்பாக, மாணவி சு. இந்துமதி(IICS)  ‘காலனும் கிழவியும்’ எனும் தலைப்பில் அமைந்த சிறுகதையைத் தெளிவாக விளக்கினார். இந்நிகழ்வில் இளங்கலை கணினி அறிவியல் இரண்டாமாண்டு மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ADMISSION