Club Events
09-Nov-2024
நெஞ்சுரமும் நேர்மையும்
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இலக்கிய மன்றம் சார்பாக (11.09.24) இன்று மகாகவி பாரதியார் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக ஒரு நாள் கருத்தரங்கமானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கியது. இந்நிகழ்வில் வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் சி. தீபா அவர்கள் "நெஞ்சுரமும் நேர்மையும்" எனும் பொருண்மையில் சிறப்புரை வழங்கினார் அவர் பேசுகையில் வாழ்கைக்கும் வார்த்தைக்கும் இடைவெளி இன்றி வாழ்ந்தவன்,மன உறுதியையும் நேர்மையும் ஒருங்கே பெற்றவன் பாரதி என்று பாரதிக்கு புகழாரம் சூட்டினார். மேலும் பாரதியின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை எடுத்துரைத்து மாணவர்கள் மனதில் நெஞ்சுரத்தையும் நேர்மையையும் விதைத்தார். இளங்கலை மாணவர்கள் கலந்து கொண்டு பயனைடந்தனர்.
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College