Club Events
08-Oct-2023
முப்பெரும் விழா
பிபிஜி கலை அறிவியல் கல்லூரியும்,கவையன்புத்தூர் தமிழ் சங்கமும்இணைந்து, 77 -ஆவது சுதந்திர நாள் விழா, தமிழ் பண்பாட்டு மையம் தொடக்க விழா மற்றும் சங்கத்தின் 52-ஆவது திங்கள் அமர்வு என முப்பெரும் விழா இன்று 10-08-2023 வியாழக்கிழமை பிபிஜி கலை அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் 10 மணிக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டன. மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட, ஆன்றோர்கள் குத்து விளக்கிற்கு ஒளியேற்ற, விழா இனிதே தொடங்கியது.. கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் முனைவர் சந்திரகலா அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் நா. முத்துமணி அவர்கள் விழாவிற்கு தலைமையேற்றார். அவர் தனது உரையில், மாணவ மணிகளின் திறனை அறிந்த அரசு இன்று மெட்ரிக், சிபிஎஸ்சி பள்ளிகளிலும் தமிழ் மொழி கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இனி மாணவச் செல்வங்கள் தன்னம்பிக்கையுடனும், தைரியமாகவும் தனது சிந்தனைகளை, ஆக்க செயல்களை, கண்டுபிடிப்புகளைத் தமிழில் வெளியிடலாம்.தனது ஆழ்மன கனவுகளை அறிவியல் படி தமிழில் வெளிக்கொணர்ந்து சுதந்திரமாய் செயல்பட்டு வெளியிடலாம்... "என்ன இல்லை தமிழில்? எல்லாம் உண்டு தமிழில். "!சாதிக்கப் பிறந்தவன் தமிழன். உலகிற்கு எடுத்துக் காட்டானவன் தமிழன். என்றார்.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College