Club Events
31-Jul-2026
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை கணித்தமிழ்ப் பேரவை & IQAC இணைந்து *27.07.2026 முதல் 31.07.2026 வரை (காலை 10 மணி முதல் 11. 30 மணி வரை)* ஐந்து நாள் *"கணினி யுகமும் தமிழும் - 3”* எனும் பொருண்மையிலான ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் ஐந்தாம் நாள் நிகழ்வு 31.07.2026 இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சிறப்பு விருந்தினராக பேராசிரியர் செ. துரை, உதவிப் பேராசிரியர், கணினி அறிவியல் துறை, பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கோவை, அவர்கள் கலந்துகொண்டு *இணைய யுகத்தில் தமிழ் கற்பித்தலின் புதிய பரிமாணங்கள் மற்றும் வலைத்தளம் உருவாக்கம்.* என்கிற பொருண்மையில் சிறப்புரை நிழ்த்தினார். அவர் தமது உரையில் தமிழுக்கான செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது என்று பயிற்சி அளித்தார். பேராசிரியர்கள், தமிழ் ஆர்வளர்கள், ஆய்வு மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College