Club Events
12-Dec-2025
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை இலக்கிய மன்றம் சார்பாக 12.12.2025 இன்று பிற்பகல் 2 மணிக்கு “படைப்பிலக்கிய பயிற்சி” நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரைப்படப் பாடலாசிரியர், தமிழ்க்கவிஞர் பாவலர் அறிவுமதி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கவிதை, பாடல்களின் தாயகமாக வேளாண் மக்களின் வாழ்வியல் விளங்குகிறது என்றும், கவிதைகள் திரைப்பட பாடல்கள் எவ்வாறு இசையுடன் இயற்ற வேண்டும் என்றும் மாணவர்களுக்குப் படைப்பாக்கப் பயிற்சியை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் நா. முத்துமணி அவர்கள் இந்நிகழ்விற்குத் தலைமை தாங்கினார். பல்துறை மாணவர்கள் கலந்துகொண்டு படைப்பாக்கப் பயிற்சியைப் பெற்றனர்.
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College