Club Events
11-Sep-2025
தமிழால் இணைவோம் உலகத்தமிழ்ப் பேரியக்கம்
இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம் - 2025
பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை மற்றும் தமிழால் இணைவோம் உலகத்தமிழ்ப் பேரியக்கம் இணைந்து "பாரதியாரின் படைப்புலகம்" எனும் பொருன்மையில் 11-09-2025 அன்று பன்னாட்டுக் கருத்தரங்கம் பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கருத்தரங்க அறையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. பன்னாட்டு கருத்தரங்கத்தை பிபிஜி கல்விக் குழுமத் தாளாளர் சாந்தி தங்கவேலு அவர்கள் தலைமை தாங்கினார்கள். பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் நா. முத்துமணி அர்கள் சிறப்புறை வழங்கினார்.
இக்கருத்தரங்கத்தில் தமிழால் இணைவோம் உலகத்தமிழ்ப் பேரியக்கத் தலைவர் சத்யநாராயணராஜ் பாலகுரு அவர்கள் ஆய்வுக் கோவையை வெளியிட பிபிஜி கல்வி நிறுவனத் தாளாளர் மற்றும் பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இருவரும் ஆய்வுக் கோவையைப் பெற்றுக்கொண்டனர். இக்கருத்தரங்கில் பல்வேறு நாடுகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கட்டுரையாளர்கள் கலந்துகொண்டு கட்டுரைகளை வழங்கினார்கள்.. பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அனைத்துத் துறைப் பேராசிரியர்கள், ஆய்வு மாணாக்கர்கள் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College